444. அணுசக்தி ஒப்பந்தம், இடதுசாரிகள், பிரதமர், ஒபாமா ...
பத்து நாட்களுக்கு முன் நமது பிரதமர் மன்மோகன், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் தான் ராஜினாமா செய்து விடப் போவதாக (சோனியாவுடன் ஒரு நாடகம் நடத்தியதாக) செய்தி அடிபட்டது. நியாயமாக, விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, ஏழை எளிய மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கும் பிரதமரும், நிதி அமைச்சரும் ஏற்கனவே பதவி விலகி இருக்க வேண்டியவர்கள். அந்தக் காரணம் பொருத்தமானதாகவும் இருந்திருக்கும் ! நாளுக்கு நாள் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் Inflation Index பற்றி துளியும் கவலையின்றி, கவைக்குதவாத அணுஆயுத ஒப்பந்தம் ஒன்றைப் பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நமது பிரதமரைப் பார்த்தால், ஒரே சமயத்தில் வருத்தமாகவும் / காமெடியாகவும் உள்ளது !!!
ஆகஸ்ட் 2006 திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று, 2031-32 வரை இந்தியாவின் ஆண்டொன்றுக்கான 8 சதவிகித GDP தொடர் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதும் 11 வகை எரிபொருள் கலப்புகள் (Fuel Mix) தரவல்ல சாதக/பாதகங்கள் குறித்துப் பேசும்போது, இன்றிலிருந்து 2031-32 வரை இந்தியாவின் அணுசக்தித் திறன் 20 மடங்காக உயர்ந்தாலும் நாட்டின் மொத்தத் தேவையில் அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. அதாவது, அணுசக்தி எக்காலத்திலும் நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு தீர்வாகாது என்பது நிதர்சனமான உண்மை.
123 ஒப்பந்தம் தொடர்பான எனது பழைய பதிவு இங்கே, வாசித்து விட்டுத் தொடரவும்.
http://balaji_ammu.blogspot.com/2007/12/star4.html
இதில் நமது டிவி மீடியா அடிக்கும் கூத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது! இந்த ஒப்பந்தம் குறித்த சாதக/பாதகங்கள் சரியாக எடுத்துக் கூறுவதில்லை. மீடியாவின் அமெரிக்க ஜால்ரா காதைக் கிழிக்கிறது. இவ்விஷயத்தில் இடது சாரிகள் எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது என்பது தான் என் கருத்து. மேலும், இதுவரை நடந்துள்ள காங்கிரஸ்-இடதுசாரி ஆலோசனைக் கூட்டங்களில், காங்கிரஸ் இந்த ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருந்திருப்பது, மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்காக, இடதுசாரியை கழட்டி விடத் துணிந்துள்ள ஆளும் கட்சி, சமாஜ்வாடி கட்சியின் காலில் விழத் தயாராக இருப்பது, உச்சபட்ச காமெடி :) சாகக் கிடக்கும் அமெரிக்க அணுஆயுதத் தொழில் புத்துணர்ச்சி பெற்று (அதாவது, இந்தியா அங்கிருந்து தொழில் நுட்பத்தையும், யுரேனியத்தையும் இறக்குமதி செய்வதின் வாயிலாக!) மீண்டும் வளர்வதற்கு இந்தியா எதற்கு உதவ வேண்டும் என்பது ஒரு முக்கியக் கேள்வி!
அடுத்து, தலைப்பில் "ஒபாமா"வும் வருவதால், அவர் மேட்டர் பற்றியும் எழுதணும் ! அதை
தனிப்பதிவாக இடுகிறேன், ஓக்கேவா ?
எ.அ.பாலா
10 மறுமொழிகள்:
Test !
இந்த ஒப்பந்தத்தை நானும் ஆதரிக்கவில்லை. ஆனா, ஒரேயடியா அணுசக்தி நமக்குத் தேவையே இல்லைன்னும் சொல்ல முடியல்ல. கார்பன் அடிப்படை எரிபொருட்களின் வளமும் குறைஞ்சிக்கிட்டே வந்து ஒட்டு மொத்தமா காலியாகிவிடும் வாய்ப்பும் உள்ளது. (Global warming போன்ற சிக்கல்கள் வேறு) ஆகவே அணுசக்தி சாத்தியங்களும் ஆராயப்பட வேண்டியவையே. யுரேனியம் இல்லாம தோரியம் அடிப்படைத் தீர்வுகள் சாத்தியப்படுமானா இன்னமும் 2500 ஆண்டுகளுக்கு கவலையில்லைன்னு எங்கயோ படிச்சேன் :) (இந்த அணுசக்தியைப் பொறுத்தவரை எல்லாமே ஆயிரம் ஆண்டுகள் கணக்கில்தான் வெளிப்படுத்தப்படுது.)
Voice on Wings,
கருத்துக்கு நன்றி. எனது முக்கியமான பாயிண்ட், ரோம் பத்தி எரிஞ்சபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையா நமது பிரதமர் இருக்கறது தான். எவ்வளவு பிரச்சினைகள்: Inflation, நக்ஸலைட், காஷ்மீர், வடகிழக்கு ... ஆனால் மன்மோகன் அவர்களுக்கு, புஷ்ஷை எப்படியாவது திருப்தி படுத்த வேண்டும், அப்படி என்ன அவசரம், எதற்காக ? சரியான ஒப்பந்தம் என்றால், அடுத்து வரவிருக்கும் அமெரிக்க அதிபர் 'வேண்டாம்' என்று சொல்லி விடப்போவதில்லை. இப்போதே, ஒபாமா மற்றும் மெக்கெயின் தரப்பிடம் informal-ஆகப் பேசி, அவர் தமது கருத்துகளை தெரிந்து கொள்ளலாமே!
எப்படி இருப்பினும், ஜனத்தொகை அதிகமுள்ள நமது நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு அணுசக்தி அளிக்கக்கூடிய பங்கு (எந்த காலத்திலும்) மிகக் குறைவே என்பது தான் நிதர்சனம்! மேலும், economic viability இல்லை!(அணுசக்தியிலிருந்து கிடைக்கும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான செலவு, தற்போதைய செலவை விட 3 மடங்கு அதிகம்!) அது போலவே, எரிவாயு பயன்படுத்துதல் அதிகரிக்க வேண்டும். இரானிடமிருந்து நமக்கு எரிவாயு கிடைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க எதிர்ப்பு ஏன் வலுக்கிறது ?
நீங்கள் கூறும் தோரியம் தொழில்நுட்பம் சரியான் பயன் தரும் நிலையை அடைய குறைந்தபட்சம் 15-20 ஆண்டுகள் ஆகும் போலத் தெரிகிறது. ஆனால், இந்தியாவில் நிறைய தோரியம் உள்ளது.
எ.அ.பாலா
அரசியல் தவிர விஞ்ஞானிகளின் கருத்துக்கள் ஏன் அணுசக்தி ஒப்பந்தத்தை சார்ந்தும்,எதிர்பொருள் கொண்டும் உள்ளது என்பதில் எனக்கு குழப்பம்.பாதகங்கள் இருக்கும் பட்சத்தில் எப்படி பலமுறை வட்ட,சதுர மேஜை மாநாடு நடத்தி கையெழுத்திடும் நிலைக்கு ஒப்பந்தம் வரும்?
வாய்ப்புகள் இருந்தும் இன்னும் நாம் சீனாவுடன் தொழில் முறையாக போட்டியிட முடியாமல் இருக்கிறோம்.அதற்கு காரணங்களாக அரசியில் குறுக்கீடுகள்,அரசாங்க அலுவலகங்கள் நகரும் முறை,கட்டமைப்பு வசதிக்குறைபாடுகள்,சாலை மேம்பாட்டு திட்டம்,ராமர் வந்து பூந்து செய்யும் கலாட்டாக்கல் என ஏகப்பட்ட கோணல்கள்களுடன் நாம் ஆமை வேகத்தில் போட்டியிடுகிறோம்.
இரண்டு பொருளாதார நிபுணர்களின் நிர்வாகத்திலும் பொருளாதார வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் பல விசயங்கள் உலக சார்பு நிலையில் இருப்பதால் பிரதமரையும்,நிதி அமைச்சரையும் மட்டும் குறை கூறுவதில் நியாயமில்லை.
1. //எப்படி இருப்பினும், ஜனத்தொகை அதிகமுள்ள நமது நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு அணுசக்தி அளிக்கக்கூடிய பங்கு (எந்த காலத்திலும்) மிகக் குறைவே என்பது தான் நிதர்சனம்!//
2. // மேலும், எcஒனொமிc விஅபிலிட்ய் இல்லை!(அணுசக்தியிலிருந்து கிடைக்கும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான செலவு, தற்போதைய செலவை விட 3 மடங்கு அதிகம்!)//
3. //அது போலவே, எரிவாயு பயன்படுத்துதல் அதிகரிக்க வேண்டும்.//
1. ஏன் இப்படி சொல்கிறீர்கள் என விளக்க இயலுமா? அணுசக்தியின் அளவு குறைவு என்கிறீர்களா? அல்லது எனர்ஜி தேவை கூடிக்கொண்டே செல்லும் என்கிறீர்களா?
2. எகனாமிக் வயபிலிட்டி உற்பத்தி பெருகும் போது கட்டுக்குள் வருமே?
3. எரிவாயுவும் தீர கூடிய பொருள்தான் என்பதை நினைவில் கொள்க.
<==
அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. ==>
அதானே இந்த 6% எரிபொருளுக்காக இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம் ஏன்? அந்த ஒப்பந்தம் சரின்னா, அடுத்த அமெரிக்க பிரதமர் ஒத்துக்கபோறார்.
ராஜ நடராஜன்,
கருத்துக்கு நன்றி. இந்த வட்ட/சதுர மேஜை மாநாடுகளில் ஏற்பட்ட ஒப்புதல்களை/முடிவுகளை நமது அரசு யாரிடமும் பகிர்ந்து கொள்ள மறுப்பது தான் முக்கியப் பிரச்சினையே :(
//இரண்டு பொருளாதார நிபுணர்களின் நிர்வாகத்திலும் பொருளாதார வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் பல விசயங்கள் உலக சார்பு நிலையில் இருப்பதால் பிரதமரையும்,நிதி அமைச்சரையும் மட்டும் குறை கூறுவதில் நியாயமில்லை.
//
இதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. நிபுணர்கள் என்றால் ஒரு வருடம் முன்பே சில நல்ல நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.
உதாரணம்: பெட்ரோல்/டீசல் விலையை சென்ற வருடமே அதிகரித்து இருக்கலாம் அல்லவா ?
விஜய்,
வாங்க !
//1. ஏன் இப்படி சொல்கிறீர்கள் என விளக்க இயலுமா? அணுசக்தியின் அளவு குறைவு என்கிறீர்களா? அல்லது எனர்ஜி தேவை கூடிக்கொண்டே செல்லும் என்கிறீர்களா?
2. எகனாமிக் வயபிலிட்டி உற்பத்தி பெருகும் போது கட்டுக்குள் வருமே?
3. எரிவாயுவும் தீர கூடிய பொருள்தான் என்பதை நினைவில் கொள்க.
//
அணுசக்தியிலிருந்து நாட்டின் தேவையில் சிறிய அளவு (4-6%) மின்சாரம் தான் எடுக்க முடியும் எனும்போது எகனாமிக் வயபிலிட்டி ஏற்பட வாய்ப்பில்லை. எரிவாயுவும் தீரக்கூடிய பொருள் தான் என்பதை மறுக்கவில்லை. தோரியம் தொழில்நுட்பத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சாமான்யன் சிவா,
//
அதானே இந்த 6% எரிபொருளுக்காக இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம் ஏன்? அந்த ஒப்பந்தம் சரின்னா, அடுத்த அமெரிக்க பிரதமர் ஒத்துக்கபோறார்.
//
அதே தான் நான் கூறுவதும் !
Tamil Paiyan,
நன்றி.
எ.அ.பாலா
//இதில் நமது டிவி மீடியா அடிக்கும் கூத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது! இந்த ஒப்பந்தம் குறித்த சாதக/பாதகங்கள் சரியாக எடுத்துக் கூறுவதில்லை. மீடியாவின் அமெரிக்க ஜால்ரா காதைக் கிழிக்கிறது.
//
துட்டு வாங்கியிருப்பாங்களோ ?
Post a Comment